Thursday, January 14, 2021

 விஷ விருட்சம் RSS வேலையைத் துவங்கி விட்டது. ரஜனி தேறவில்லை என தெரிந்ததும் BJP, குருமூர்த்தி மூலமாக சசிகலாவைப் பயன்படுத்தத் துவங்கி விட்டது. வீடு தீப்பற்றி எரியும் போது, அணைப்பதற்கு கங்கை நீருக்காகக் காத்திருக்கக் கூடாது என அருண்சோரி சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் குருமூர்த்தி. அதாவது சசிகலா சாக்கடையாக இருந்தாலும் தீயை அணைக்க அவரையும் பயன்படுத்தலாம் என் ற வர்ணாசிரம வெறியனின் பேச்சு, அதிமுகவை உடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஓபிஎஸ் ஆதரவு நிலையை எடுத்து, அமமுக, பிஜேபி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற கூட்டணி அமைவதற்கான முயற்சியில் RSS இறங்கி உள்ளது. எந்தக் கட்டத்திலும் இனி எப்போதும் பிஜேபி உடன் கூட்டணி இல்லை என உறுதியாக அறிவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் அதிமுகவின் ஒரு பகுதி துரோக வரலாற்றை எழுதப் போகிறதோ என்ற கவலை அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது. அதிமுகவா அல்லது திமுகவா என்பது அல்ல பிரச்சினை. தமிழர்கள் துரோகத்திற்கு விலை போகக்கூடாது என்பதே நமது கவலை.

Wednesday, December 16, 2020

 டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம். 1982 ஆம் ஆண்டு இந்த தேதியில்தான் திரு. D.S.நாக்ரா மற்றும் சத்யேந்திர சிங் ஆகியோர் 1972 இல் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்தது. நீதிபதிகள் Y.V.சந்திரசூட் மற்றும் O.சின்னப்ப ரெட்டி முதலானோர் இடம்பெற்ற அமர்வில்தான் இந்தத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஓய்வூதியம் பெறுவதால் பழைய, புதிய ஓய்வூதியர் என்ற வேறுபாடு கூடாது என்ற நிலை ஏற்கப்பட்டது. ஓய்வூதிய மாற்றம் (Pension Revision) என்பதும் பின்னர் ஏற்கப்பட்டது. நமது துறை அரசுக் கொள்கை முடிவு என்ற அடிப்படையில் BSNL என்ற பொதுத்துறையாக 1-10-2000 முதல் மாற்றப்பட்டது. ஆனால் ஓய்வூதியம் பற்றிய எந்த முடிவையும் தொலைத்தொடர்புத் துறை எடுக்க வில்லை. ஏனெனில் பெரும்பாலான பொதுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதே நிலை இங்கும் நீடிக்கும் என்பதை உணர்ந்த தோழர். குப்தா, அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது என்பதோடு நில்லாமல்,  நாம் பெற்றுக் கொண்டிருக்கும் உரிமைகளைக் காப்பதில் கவனம் குவித்தார். 


ஆகவே ஓய்வூதியம் குறித்து அரசு ஆர்வம் காட்டாததைக் கண்டித்து போராட்ட அறிவிப்பைச் செய்தார். அறிவிப்பை செய்து விட்டு பின் வாபஸ் பெறுவது என்பதற்குப் பதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 6,7,8 மூன்று தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. NFTE, FNTO இணைந்து நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை ஒட்டி போடப்பட்ட ஒப்பந்தத்தில்தான் நமக்கு ஓய்வூதியம் உறுதி செய்யப் பட்டது. NFTE சம்மேளனச் செயலராக இருந்த தோழர். குப்தாவும், அவருடன் ஒத்துழைத்த தோழர். வள்ளிநாயகமும் போற்றப்பட வேண்டியவர்கள். அதிகாரிகள் சங்கங்கள் இருந்தும் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் நாம் போராடிப் பெற்றோம் என்ற பெருமை நமக்குரியது. ஓய்வூதிய சட்டம் 1972 இல் பிரிவு 37 A சேர்க்கப் பட்டு, ஊதிய மாற்றம் வரும்போது ஓய்வூதிய மாற்றமும் வர வேண்டும் என்பது ஏற்கப் பட்டது.  அந்த அடிப்படையில் இரண்டு ஊதிய மாற்றங்கள் பொதுத்துறையில் நிகழ்ந்த போதும் நாம் கணிசமாக ஓய்வூதியத்தில் மாற்றம் பெற்றோம்.


ஆனால் தற்போது ஊதிய மாற்றம் இங்கு வராததால், ஓய்வூதிய மாற்றம் நமக்கு கிடைக்கவில்லை. நாக்ரா மற்றும் சத்தியேந்திர சிங் ஆகியோரின் வழக்கில் பெற்ற தீர்ப்பு நமக்கு இப்போது கைகொடுக்கவில்லை. ஓய்வூதியத்தில் ஏற்றத்தாழ்வு என்பது வேறு; ஓய்வூதிய மாற்றம் என்பது வேறு. மத்திய, மாநில அரசுகளிலும் ஊதிய மாற்றம் நிகழ்ந்த பிறகே ஓய்வூதிய மாற்றம் நிகழ்ந்தது. நமக்கும் ஊதிய மாற்றம் மூன்றாவது முறையாக வந்திருக்குமெனில், ஓய்வூதிய மாற்றம் வந்திருக்கும். ஆனால் பொதுத்துறைகளில் ஊதிய மாற்றம் என்பது இலாபத்தின் அடிப்படையில் என புதிய வழிகாட்டுதல் வந்ததால் நமக்கு ஊதிய மாற்றம் வரவில்லை. BSNL அடுத்தடுத்து மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டவில்லை என்ற காரணம். 


இந்த இலாபத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் என்ற விதி நமக்குப் பொருந்தாது என்பதன் மேல் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். BSNL மற்ற பொதுத்துறைகளைப் போலில்லாமல், மக்கள் சேவை என்ற அடிப்படையில் மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். இலாபம் ஈட்ட முடியாத பகுதிகளில் கூட மக்கள் சேவைக்காக, நாம் பணிபுரிய வேண்டி உள்ளது. தனியார் இந்த நிபந்தனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். எனவே நாம் நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. 


இந்த சூழலில், நம் துறை ஊழியர் சங்கங்களோடு இணைந்து ஊதிய மாற்றத்திற்கான நிபந்தனையை தளர்த்திட வேண்டி தீவிரமான தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.  இதை விடுத்து தவறான, அடைய முடியாத தீர்ப்புக்காக, கால விரயம், பண விரயம் செய்வதற்குத் துணிந்து நீதி மன்றத்தை நாடுவது என்ற முடிவு எந்தப் பலனையும் தரப் போவதில்லை. 


எனவே இந்த நாளில் நமது தலைமை சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு, ஆழ்ந்து பரிசீலனை செய்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என அனைவரும் வற்புறுத்துவோம். 


இதுவே நமது ஓய்வூதியர்களுக்கு நமது காலத்தில் நாம் செய்யும் அடிப்படைக் கடமையாகும்.


இவண்


தோழமையுடன்,


நா.வீரபாண்டியன்,


முதன்மை ஆலோசகர்,

AIBSNLPWA, தஞ்சை மாவட்டம்.

17.12.2020.

Monday, November 2, 2020

 ஆர்.எஸ்.எஸ். பதுங்குகிறதா, பின்வாங்குகிறதா?

பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக சர்வாதிகாரப் போக்கில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் நாடெங்கும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்த சட்டங்கள், காஷ்மீர் சிறப்புத் தகுதிக்கான பிரிவு 370 நீக்கம், விவசாயிகளுக்கெதிரான மூன்று சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்கள் நம் நாடு முழுதும் பெரும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மற்றும் தலித், பழங்குடியினர் மீது நித்தம் தொடுக்கப்படும் பாலியல், வன்முறைத் தாக்குதல்கள்1அகில உலக அளவில் மனித உரிமைக்கான அமைப்புகளின் கடுங்கண்டனத்திற்கு பிஜேபி அரசு ஆளாகி உள்ளது.

குறிப்பாக, கொரோனாத் தொற்றுக்கு ஆளான இந்த எட்டு மாதங்களில் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. இந்த சூழ்நிலையில், ஆர்.ஸ்.ஸ்-இன் சர்சங்க்சாலக் மோஹன் பகவத் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு கருத்துக்களை திருவாய் மலர்ந்து வெளியிட்டுள்ளார். 

“உலகிலேயே முஸ்லிம் மக்கள் மிகமிக மகிழ்ச்சியாக வாழும் நாடு இந்தியாதான். இந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம், இந்துக்கள் மட்டும்தான் இங்கு வாழ முடியும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை மதத்தினர் வாழ வேண்டும் எனில், அவர்கள், இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறவில்லை.முஸ்லிம் மக்களும் சம தகுதி உள்ளவர்கள்”, என இந்துத்வா தத்துவத்திலிருந்து முற்றிலும் விலகியவராக, புது வேடம் தரித்திருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக நாளுக்குநாள் பெருகி எழும் எதிர்ப்புப் பேரலையைக் கண்டு ஏற்பட்ட கலக்கம் அவர் மனதில் இந்த திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மனமாற்றம் வரவேற்கத் தக்கதே. ஆனால் சிறுபான்மை மக்கள் மிகமிக மகிழ்ச்சியில் வாழ்கிறார்கள் என்பதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை நாம் அவருக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகிறது. 

இந்து மதத்தின் அடிப்படை அம்சமான சகிப்புத் தன்மை, அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை ஆகிய அனைத்து மனிதாபிமானப் பண்புகளை புறக்கணித்து, இந்து தேசியவாதம் என்னும் ஃபாசிச வெறியைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்வா ஆர்.எஸ்.ஸ். சாத்தான் ஓதும் புதிய வேதம் குறித்து நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டி உள்ளது. இந்தியா என்பதை இந்து ராஷ்ட்ரம் ஆக்குவதையே தலையாயப் பணி என்ற முழக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அந்த அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. பிஜேபி ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் உண்டாக்கியிருக்கிற அரசியல் ரீதியான நெருக்கடியே இந்த மன மாற்றத்திற்குக் காரணம். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மதச்சார்பின்மைக்கு எதிரான எந்தக் கொள்கையையும் இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா கும்பல் உணரத் துவங்கி உள்ளது.

ஆனாலும், மோஹன் பகவத் கூறுவது போல், முஸ்லிம் மக்கள் உலகிலேயே இங்குதான் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதில் துளியும் உண்மையில்லை. அகில உலக அளவில் ஆய்வு செய்யும் அமைப்புகள் தங்கள் அறிக்கையின் மூலம் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். மார்ச், 2020 இல் ‘எட்டாம் உலகம்’(Eighth World) என்ற அமைப்பு வெளியிட்ட ‘மகிழ்ச்சி அறிக்கை’ (Happiness Report), 153 நாடுகளில், இந்தியா 144 வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடத்தில் ஃபின்லாந்து, டென்மார்க்,ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் வருகின்றன. பாகிஸ்தான் 66 வது இடத்தில். வங்க தேசம் 107 வது இடத்தில். பல இஸ்லாமிய நாடுகள் நம்மைவிட மிகவும் முன்னணியில். உள்ளன. மகிழ்ச்சியற்ற நாடுகளான ஆஃப்கானிஸ்தான் (153), சூடான் (152), ஜிம்ப்பாப்வே(151) ஆகிய நாடுகளுக்கு அருகே கடைசி பத்து நாடுகளுக்குள் நாம் வருகிறோம். பொதுவான நல்ல வாழ்க்கை, நல்லுணர்வு, ஓரளவு ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம், வேலையில்லாத் திண்டாட்டம், நீடித்த ஆயுள், சுதந்திரம், வருமானம், லஞ்ச லாவண்யமற்ற சமூகம் ஆகியவையே மதிப்பீடு செய்யும் அளவு கோள்கள். நம் நாடு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பின்னடைந்து உள்ளதை ஆய்வறிக்கை சுட்டுகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து இருப்பதோடு, ஏறத்தாழ 12 கோடிப் பேர் கொரோனாத் தொற்றுக் காலத்தில் வேலையை இழந்துள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்த விபரமும் கைவசம் இல்லை என வெட்கமின்றி மத்திய ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள். தொழிலாளர் நலத்துறை தூங்குகிறது. ஆனால் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க சட்டங்களை அமுல் படுத்துவதில் மட்டும் தன் அசுர வேகத்தைக் காட்டுகிறது.

உலகப் பட்டினி தர வரிசைப் பட்டியல், 2020 இல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 107 நாடுகளில் இந்தியா, 94 வது இடத்தில் உள்ளது. வளர்ச்சி ஒன்றே மோடியின் குறிக்கோள் என வாய்ப்பந்தல் போடும் பிஜேபி மற்றும் மோகன் பகவத் கும்பல்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும், அதை மறைத்து பொய்யுரைப்பதில் பிரதமர் முதல் கடைசி இந்துத்வா தொண்டன் வரை ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை.

உலக பத்திரிக்கை சுதந்திரம் குறித்த பட்டியலில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பெருமை பேசும் நாம், 180 நாடுகள் கொண்ட வரிசைப் பட்டியலில் 142 ஆவது இடத்தில்  பின் தங்கி நிற்கிறோம். மலேசியா, துனீஷியா போன்ற இஸ்லாமிய நாடுகள் நம்மை விட முன்னணியில் உள்ளன. பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் மீதான  தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்திருப்பதே நம் பின்னடைவுக்குக் காரணம். மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற, எழுதுகின்ற அறிஞர்கள், தீவிர வாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு எந்த விசாரணையுமின்றி சிறைக் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் கொடுமை இதற்கு முன் இல்லாத அளவிற்கு இழைக்கப்படுகிறது.

சட்டத்தின் ஆட்சி என்பது ஒழிந்து, நீதி மன்றங்கள் ஆட்சியாளரின் அடிவருடிகளாக மாறிப் போனதை நாளுக்கு நாள் உயரமை நீதி மன்றங்கள் வெளியிடும் தீர்ப்புகள் நிரூபிக்கின்றன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தந்த நீதிமன்றத் தீர்ப்பு, நீதி மன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்ட 128 நாடுகள் கொண்ட வரிசையில் நாம் 69 வது இடத்தில். மோடியின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, அகில உலக மதச்சுதந்திரம் குறித்த ஆணையம், இந்திய பற்றிக் குறிப்பிடுகையில், “இந்தியா, 2019 இல் மதச்சுதந்திரத்தை அளிப்பதில் மிகவும் கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது.மத்தியில் ஆளும் அரசாங்கம், தனது பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மதங்களுக்கான சுதந்திரம் வழங்குவதில், புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிரான கொள்கைகளை அமுல் படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது”, எனக் கூறுகிறது. சிறைக்கொடுமைகள், அவமானகரமாக குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை நடத்துவது, சுதந்திரமாக வாழ்வதைத் தடுப்பது, தனி நபர் பாது காப்பின்மை, தலித் மக்கள் மீதான சாதியக் கொடுமைகள், பாலியல் குற்றம் புரியும் சமூக மேலாண்மையாளர்களுக்குப் பாதுகாப்பு என பல வழிகளில் தனி மனித சமூக சுதந்திரம் துளியும் இல்லாததே  இந்த இழிநிலைக்குக் காரணம். 

மேலும், பகவத், ‘எந்த நாட்டிலும், சிறுபான்மை சமூகம் தொடர்ந்து வாழ முடியாது’ எனக் கூறியதன் மூலம், தங்கள் இயக்கத்தின் மற்ற மதத்தினர் மீதான சகிப்பின்மையை வெளிப்படையாகக் காடுகிறார். உலகின் பல நாடுகளில் அனைத்து மதம் சார்ந்த மக்கள் ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள் என்பதை அறியாதவரா மோகன் பகவத்! இந்துத்வா பேரினவாதத்தில் ஊறித் திளைப்பவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

அனைத்திற்கும் மேலாக அரசியல் நெருக்கடி முற்றும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். பொய் மான் வேடம் தரிக்கும். விடுதலைப் போராட்ட வரலாறு அவர்களின் துரோகச்செயல்களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. மோகன் பகவத்தின் மனமாற்றம் நிரந்தரமானது என்பதை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து தங்கள் செயல்களால் நிரூபிக்க வேண்டும். 

பின் வாங்கலா அல்லது பதுங்கலா என்பது அப்போது தெரியும்.


நா.வீரபாண்டியன்,

பட்டுக்கோட்டை.

24-10-2020.












Saturday, October 17, 2020

OA Admitted -There ends matter?

                    AIBSNLPWA

              

                  On Pension Revision


OA admitted in the court-There ends        

                           matter?


Dear Comrades, Greetings to you all! After some time, the nessassity compels me to share my views with you on pension revision. I request you to go through this detailed note and react your opinion whatever it may be. Our Association at last filed the case before Hon'ble Principal CAT, New Delhi and the OA was admitted. After listing, the case will come for trial and regular hearing will start. We know the court proceedings but nobody could foretell when the case will come to end. The case will not come to an end with PCAT, New Delhi. Many stages it has to pass through. 


Another case was filed by one Retired Executives' Association represented by Sri.Prahladrai, its GS. Two other Associations not preferring for legal battle, took the case with the DOT and BSNL. Sri.S.S.Mistry of AIBDPA, one of those two Associations, wrote a letter to Hon'ble PM,Narendra modiji requesting for the settlement of pension revision.


Before going into the details on the OA filed by our Association and different prayers of other Associations, I would like to remind our members and the leaders about the basic rules which justify our pension under IDA. As long as these rules are in force, the court could not change them. If we are able to convince the court, the court may give directions to the GOI or to the Respondents to amend the rules so as to justify our pension revision on the basis of our request we put forth.


Brief History: 1. As per Fifth Pay Commission, our pay scales were revised from 01.01.1996 as we were CG Employees then. After a year the PSUs got their wage revision as per first PRC recommendations wef 01.01.1997.


2. We became PSU employees from 01.10.2000 after BSNL was formed. Though we got already our pay revision as CG employees just a year back, we claimed to wage revision as PSU employees. Since we ceased to be the CG employees to become PSU employees after Corporatisation under relevant rules, our claim took off. Our wages got revised at par with other PSUs. There was no doubt that we were PSU employees.


3. The second PRC was announced and through it's recommendations our Pay revision was done weg 01-01-2007. That too, after the implementation of Sixth CPC to CG Employees. It was not applicable to us and we didn't raise any demand for wage revision from 01-01-2006 as done to CG Employees since we had least doubt about our status. We are always BSNL employees which is a PSU. So we had to wait as other PSU employees until 01.01.2007. Our Pay revision with 30% waitage was effected from 01.01.2007. We happily accepted the PSU Pay scales which were higher than those of CG, enjoying the status of PSU Employees. We know without exception that the next pay revision (Third PRC) will come only from 01.01.2017, ie after ten years, that too after the Seventh CPC implementation effecting from 01-01-2016 for CG employees as in the past.


4.Regarding the pensioners, we were assured of pension at par with CG employees on IDA pay scales NOT on CDA scales not applicable to PSU employees. The formula for calculation of pension is the same but the pay scales taken for calculation are different. At the time of second PRC  and just before the third PRC, no leader or cadre had doubt about our status. We still are PSU employees!


5. Our employees retired from 01.10.2000 to 31.12.2006 got Pension linked with the IDA pay they had drawn at the time of retirement. As you are well aware, our pension was fixed as 50% of average of last 10 months pay or last pay drawn in IDA Scales (including commutation portion). But after 01.01.2007, when the employees retired, they got higher pension than those who were on the same scales and retired just before 01.01.2007 because of revision of their IDA scales.The IDA pay revision brought with it this injustice to the pre 01.01.2007 retirees. This anomalous position created discrimination among the pre and post 01.01.2007 retirees. Hence pension revision became the only remedy. 

Any rule while introduced to serve a purpose or the rule makers could not anticipate fully its repercussions until implementation. Particularly this was being our experience with all CPCs. The pay anomaly was a major head ache to all unions. Similarly now the pension creates such anomaly between pre and post PRC retirees. Through the sustained persuasions with the DOT, BSNL and DOP &PW the pensioners Associations particularly  AIBSNLPWA through legal battle were able to see the pension of pre 01-01-2007 retirees was revised to wipe out anomaly.


6. This revision of pension was done taking into account the corresponding IDA scale revised after 01-01-2007. But it took about six years to get implemented. Till a residual portion of the pensioners could not get it. Case is still pending in the court.


7. This time until the recommendations of third PRC was announced and subsequent release of DPE guidelines on the mode of fixation of pay revision in all PSUs which linked the profit earned by them, we did not anticipate any negative effect in BSNL. We never asked our pension revision on CDA scale immediately after the implementation of Seventh CPC scales wef 01-01-2016 as done in the case of Pre-01-01-2016 CG pensioners. Actually we expected the third PRC recommendations on IDA pay revision. We strongly believed that after its implementation, the pensioners who retired before 01-01-2017 of BSNL would get pension revision automatically without any hurdles as happened after second PRC implementation. But the DPE guidelines on IDA pay revision shell-shocked us since BSNL was besieged within the net of loss making PSUs and became ineligible for Pay revision. Though BSNL recommended the pay revision with a weightage of 5%, DOT turned down. The serving employees of BSNL could not get pay revision from 01-01-2017 till date. Even after the pay scales announced through PRC covers Executives only, the Unions/ Associations did not take serious actions to start wage negotiation unlike in the past. Now, instead of paying attention to wage negotiations, they are so driven to the wall that they have to struggle to get monthly salary to the employees as a whole. We hope that the off-loading of employees through VRS to the extent of 50%, would improve the financial position. Hope evaporated into mirage! 


Lesson from II PRC implementation:

Dear Comrades, before analysing the demand/ prayer of our Association it put forth before the Principal CAT, New Delhi, we have to know the lessonn what we learnt from Second PRC recommendations and the consequences it caused to the pre and post 01.01.2007 pensioners.


1.After a year from sixth CPC recommendations came into being, second PRC was formed. It took effect from 01-01-2007. Initially 40% weightage was proposed on pay revision. But on the advice of Finance wing of DOT, only 30% weightage was finalised before the cabinet note was prepared. But 40% weightage was given to CG Employees.


2. The DOP &PW had earlier issued general guidelines for pension revision of IDA Pensioners vide their O.M.No.4-14/2001-P&PW(D) dated 19.09.2003. As per these guidelines, IDA Pay scales are required to be brought notionally to the equivalent of CDA pay scales. The pension and other relevant benefits will then be calculated on the notional pay in the CDA pay scales.In addition to, IDA retirees will be entitled to DR CDA pattern. But earlier, the grant of DR on CDA pattern of IDA retirees was quashed by Madras High Court in their judgement dated 29-11-2002. So DOT, quoting sub rule 9 of Rule 37- A, which says that the pension of BSNL employees has to be calculated as per 10 months average of pay ( after 6th CPC, this is to be based on last emolument drawn) and sub rule 10 of Rule 37-A, which states that the BSNL employees shall also be eligible to DR as per IDA pattern in addition to pension or family pension, opined that the emoluments of absorbed BSNL employees is on IDA pattern and 

shifting of pension on CDA pattern for revision does not appear proper. Till date, the DOT is very firm on this opinion built up upon the very sub rules available under Rule 37-A of CCS Pension Rules, 1972.


3.Further, large number of BSNL Pensioners Associations/ Service unions represented that pension revision by converting IDA Pension to CDA Pension as per DoP&PW O.M.dated 19.9.2003 was not acceptable to us as we will be put to substantial loss by doing so. All organisations demanded then that revision from IDA pension to IDA 

pattern only as done in the case of FCI.


4.DoP &PW vide its note no.4/50/2008-P&PW(D) dated 29-12-2008, indicated the difficulties in implementing their OM dated 19-9-2003 regarding Revision of IDA pension. According to para 11 of this note, they gave an advice. It says that the DPE may consider two recommendations and with approval if competent authority, issue instructions. The recommendations are i) regarding PSU Retirees drawn pension under CDA pattern and is not relevant in the case if BSNL and ii) The DPE should instruct Administrative Ministries to revise IDA pension on IDA Pattern only for PSUs under them by following the procefure adopted for issuance of revision of pay scale of PSU. Therefore for BSNL retirees, DOT only has to approve revision of IDA pension.


5. As regards the methodology of pension and pension revision, the same note of DoP&PW has indicated that pension is linked to pay drawn at the time of retirement s well as pay drawn by employee of similar status in future even after retirement. Pension revision of retired employee is linked to pay revision of existing employees.


6.As per the judgement of Apex court in case of D.S.Nakara & others Versus Union of India, the Apex Court directed that no pension scheme can be there which gives rise to a new category of pensioners after a cut off date. The DOT observed that if IDA pension is not revised from 01.01.2007, then they themselves will be creating two categories of pensioners from January 2007, one who retired after getting pay revision wef 01-01-2007 with benefit of IDA merger as well as fitment and other,  those who retired before 01-01-2007. It also said that such an approach would create a huge difference in pension if employees if the same grade retired before and after 01-01-2007.


7.Rule 37 A of CCS pension rules say that the permanent CG employees upon absorption in PSU on retirement shall be eligible for pensioner benefits on the basis of combined service rendered in Government and the PSU to which they are absorbed. Sub Rule 8 of the above said Rule defines the mode of calculation of pension/ family pension as at par with that of the CG employees, which will be in force at the time of his retirement. As per this provision, the pension was effected to BSNL pensioners. This rule does not speak about revision of pension. Com.Gupta who played a key role in framing the Rule 37 A through a National strike with the ally of Com.Vallinayagam so as to make provisions for continuance of Pension for the converted DOT employees at par with CG employees, was the only man, much worrying about this issue of pension revision and wrote repeatedly about the hurdles he anticipated while other leaders were only propagating against corporstisation.In practice, as we previously mentioned in one of the above paragraphs, the anomalous situation came when the pay revision was given as per second PRC recommendations wef 01-01-2007. As against the Apex court judgement delivered in D.S.Nagara and others versus Union of India case, two categories of pensioners were created unexpectedly. So as we have seen already, the DOT was compelled to approve Revision of pension to those who were retired from 01-10-2000 to 31-12-2006 to wipe out this anomaly fulfilling the condition of the said judgement.


Inference: From the methofology of pay revision and pension revision done in consequent of implementation of  Second PRC recommendations, we should be clear in mind about these developments.


1.The pay revision and pension revision are inseparable.


2.Conversion of IDA pension to CDA pension for BSNL sbdorbed Pensioners covered under Rule 37 A could not be done as the absorbed employees once converted to PSU en masse, they ceased yo be the Government employees.


3.While the pension contribution made is in IDA scale, that too on the basis of maximum of the pay scale and the pay drawn from first PRC has been in IDA Pay scale, sudden reversal to CDA pension just for the sake of Revision of pension could not be implemented.


4.While the pay revision of BSNL employees is still under IDA scale like other PSUs, their pension could not be revised in CDA scale. If agreed, it means that the post PRC retirees will get pension on IDA Scale only as per CCS Pension Rules, 1972 whereas the pre PRC retirees get pension revision in CDA scale which is illogic totally and unrealisable.


5.Equating the IDA scale which hitherto decides the pension of the pre PRC retirees with the CDA Scale, if admitted rarely, will make huge financial loss to the pre PRC pensioners. It was rightly pointed out by all Associations and Unions and accepted by DOT. So the DoP & PW (D) itself had to issue a changing note on its previous OM issued on 19-9-2003 on the same line.


6.In the meantime, our leaders conveniently have forgotten the relevant orders but dug out very old orders so as to fill up the hollow gaps in justifying our demand on pension revision in the broad interest of our members (certainly not due to selective amnesia). The main hurdle to our present pay revision is the DPE Guidelines issued vide OM dated 26-11-2008. This letter clearly explains the mode of pay fixation to be followed in PSUs at the time of implementing Second PRC recommendations. It mentions the affordability clause and the percentage of profit which is linked with the weightage to be given to each PSU according to the profit it earned. We, all miserably failed to pay attention towards this clause 

which was to be made not applicable to us through our united struggle. We were able to break the condition the DOT pur forth regarding the pension liability. DOT issued a notification that if the total pension liability exceeds 60% of the total revenue of BSNL, apportioned to DOT, the rest of the expenditures on Pension is to be compensated by the BSNL. But we successfully defeated this move of DOT. In respect of doing away the affordability clause, we showed little attention as we didn't think over of BSNL becoming incipient sick and incurring loss in near future. Hence this stalemate!


7.Still we always quote the OMs issued by DoP&PW(D) dated 04.08.2016 and 12.05.2017 which speak about pension revision to be implemented to CG Employees and PSU employees. But DOT in a reply to Com.Amith Gupta of West Bengal, a veteran leader of AIBSNLEA, who sought clarification through RTI, clarified that the said OMs are not applicable to BSNL/MTNL. Those instructions on Pension revision will be applicable to the pensioners who draw pension on CDA pattern only and also to the pensioners of PSUs who get pro rata pension on CDA pattern for the exclusive government service they rendered before absorption to their respective PSUs.Those OMs, the DOT again clarified, would not be applicable to BSNL/MTNL pensioners who are drawing pension on combined service in both DOT and BSNL/MTNL and under IDA pattern. Till date the DOT adheres firmly to this stand.


8.Finally, it is again reiterated that the pension revision in IDA scale only will be genuine and possible. This will follow only if IDA pay scales are revised. 


What others say?: Apart from  many small organisations representing the pensioners, four major organisations among which our AIBSNLPWA is the biggest, discuss about this pension revision issue and put forth their proposals before us and wrote their proposals to the DOT/ BSNL. Our Association independantly and the two retired Executive associations jointly filed separate cases before Hon'ble Principal CAT, New Delhi and they were admitted. Let us see what they proposed to the Court and what is the stand of other two Associations who didn't prefer legal battle till date.


AIBDPA: This association, the pensioner wing of BSNLEU, expressed its clear stand on Pension Revision of BSNL Retirees. Its demand has been that Pension Revision from 01-01-2017 with 15% fitment, delinking wage revision. They argued that Pension revision is no way connected to affordability condition or bad finance of BSNL as 100% liability of pension and pensionary payments lie with the Central government. Though they are not preferring the legal battle, they wrote that they were watching the situation.


Their demand is on IDA Pattern but delinking pay revision. They have no answer for the pensioners retired after 01-01-2017 and who draw pension as per old IDA scale only. They failed to see the anomalous condition that would come if their demand for pension revision was perhaps accepted.


BDPA: This association demands that Pension Revision of BSNL Pensioners as per 3rd P.R.C. Recommendations w.e.f. 

01.01.2017 implementing the 15% fitment formula as suggested/accepted by the Govt. as now  Pension Revision has no relativity with profit/loss of BSNL. This is,  they mentioned, the earlier commitment of Hon'ble MOC (State), Sri.Manoj sinha. They also do not prefer approaching the court. 


Their demand is also on IDA pattern and profit or loss earned by BSNL should not be linked with pension revision. They could not explain what way the pensioners retired after 01-01-2017 will get pension while there is no pay revision. They are drawing pension as per old IDA scale effected from 01-01-2007.


AIRBSNLEA and SNPWA: These two Associations representing retired Executives exclusively filed a case before PCAT, New Delhi jointly. They pray before court that pension revision for the pensioners of combined service absorbed in BSNL from 1-10-2000 to 1-1-2017 must be given on IDA pattern but without linking the Pay. It must be at par with CG employees. The fitment method as on 1-1-2017 on IDA is to be followed. In addition to the above, they pray the court to decide whatever seems fit and proper in the circumstances of this case and render justice. 


They are not particular about the fitment percentage unlike others. It may not be 15%. Any fitment percentage whether 5%, 10% or 15% as deem fit and proper!


AIBSNLPWA: Our Association prayed the court to 

i) Declare that the members of the Applicant Association are entitled to parity with Central Government pensioners in the matter of revision of pension on the same 

yardstick as granted to Central Government pensioners;


ii) Direct the Respondents to revise the pension of the members of the Applicant 

Association in terms of the recommendations of the 7th Central Pay Commission;


iii) Direct Respondents to de-link the issue of revision of pension from pay revision for 

absorbee pensioners of BSNL;


iv) Pass such other order/s as may be deemed fit and proper in the facts of the present case.


Last prayer of AIRBSNLEA and AIBSNLPWA are one and the same. We are getting pension at par with CG Employees even now. Regarding pension revision also, the parity continues. Until second PRC, we had no problem. Now after third PRC, since the pay is not revised, pension is not revised. The problem lies in the weightage which we could not get due to affordability conditions laid down by DPE what we have discussed in detail above. If pay is revised, immediately the DOT has to revise the pension and the post 1-1-2017 retirees also will get revised pension. 


But our Association like others has not changed its mind. It demands to delink the pay revision from pension revision. It conveniently slips from its responsibility of ensuring enhanced pension to the post 1-1-2017 retirees who form a considerable part of our membership. During second PRC period, post 1-1-2007 retirees got pension enhanced with their pay having been revised. We struggled for pre 1-1-2007 retirees to wipe out anomaly. Now we take the case of pre 1-1-2017 retirees for their pension revision leaving aside the post 1-1-2017 retirees, a major chunk of our total membership including the bulk VRS retirees. By doing so, we ourselves create an anomaly among these retirees which is against the Judgement delivered in the case of D.S.Nagara and others versus Union of India which we uphold wherever we go.  What is our demand in respect of them? Could we give convincing reply to them? WE CAN'T.


All other Associations also remain silent. But we could ask only our Association to explain.


Normally it will take a minimum of six to eight years to come out of the courts of all levels. The final Judgement may either be positive or negative. With huge amount of money and time being spent for the case in the coming years, we cannot sit idle simply stating that we filed the case and Our OA was admitted.


THERE ENDS MATTER? NO.


Dear Comrades, I personally appeal to you one and all to be serious and pay attention towards this complicated issue. We have to think alternate ways and means. Water takes its own course if it is blocked. So just placing the problems and pointing out the lapses in our demand in respect of this critical issue only is not my duty. 


I would like to place my suggestions to solve this issue beyond the legal battle our Association starts. Fighting through the court is a routine exercise in this democratic system. Along with this struggle we have to conduct our struggle in our organisational platform. Taking initiative to build unity among the Pensioners' Associations, we must approach service Associations to strengthen our fighting capacity. We have to think over alternatives however may they be a temporary relief, before we reach our final goal.


The revival of the BSNL being the top most priority of the Government as Hon'ble MOC declared last month , the Revision of pay as well as the pension took back seat . In this condition, our responsibility of settling this issue is increased manifolded . We have to find unavoidable alternative to our previous demand of IDA to CDA conversion bringing back the date of effect from 01-01-2017 to 01 01-2016 which was once widely and loudly reverberated over our platforms, that would justify settlement and convince the Government instead of dragging the issue further. Our members and the experienced leaders raised many doubts particularly on the issue of Pension anomoly which would arise to the Employees retired on or after 01-01-2017 , but no body could answer . First pre 01-01-2017 retirees and then post 01-01-2017 ! Losing hope on this demand they shifted the date from 01-01-2017 to 01-01-2016 . Getting Pension Revision in CDA as extended to CG Employees is the dream. But what was our demand? Initially we pleaded for Pension Revision irrespective of Pay Revision. Now we pray to delink Pension Revision from Pay Revision. We plead that we are Government servants. So we are eligible for Pension Revision at par with CG Employees as per VII CPC. In the meantime, we discovered 94.5% formula by equalizing our IDA to CDA though we opposed it during second PRC period when it was proposed by DoP&PW(D). This time our demand for Pension Revision is neither from 01-01- 2017 nor from 01-01-2016 but for pre 01-01-2016 Pensioners thereby excluding All the post-01-01-2016 retirees including the big army of retirees come out of BSNL under VRS today as already pointed out.


I put forth the following proposals before you for breaking the present impasse and getting something as enhanced pension to post 1-1-2017 and pre 1-1-2017 retirees without any anomaly and as an immediate relief.Let us analyse dispassionately all the possibilities and discuss so as to arrive at a consensus towards our demand which is easily realisable.


1.We have to take initiatives to approach all the Unions and Associations to share our views on Pension Revision shedding down the prejudices if any we had against them in the past. 


2. We may segregate our demand into two parts. First part- Immediate demand. Second part- Long term demand to be achieved through consistent persuasions. 


3.Immediate demand:119.5% IDA merger with basic Pay/Pension as on 01- 01-2017 itself instead of going back to 01-01-2016 applicable only for pre 2016 Pensioners thereby avoiding the wrath of post 01-01-2016 and post 01-01-2017 Pensioners. The remaining IDA could be worked out on the basis of newly linking point having been worked out as in the case of CG/ other PSUs. At present,we need not ask for any weightage against the guidelines given by the DPE. Pension Anomoly question will not arise at present and the increase due to merger would be considerably high, no doubt. 


4.Whenever DA/IDA crosses 50% of the basic pay, there is justification to merge it automatically with the basic pay. This cannot be rejected either by DOT or by the Finance ministry. It is the CPC recmmendation accepted by the previous Government and was done in 2004 and 2015. Moreover every time when the Pay revision is implemented, the DA/IDA as on date of effect was merged before adding to the weightage to arrive at a new pay and new pension. Revision of pension could also be computed. This is 100% neutralisation and nobody could oppose from the Government side. This will immediately give a slight increase in our pension. Anomaly will not happen. This will be an immediate relief for all. In the recent meeting held with the Member(finance) of DOT,  the GS, AIBSNLEA and other CHQ office bearers were replied that the demand for 100% IDA neutralisation wef 01-01-2017 is genuine but due to financial constraints during COVID-19 pandemic, this could not be considered at present. This means that there is an opening to consider our demand of 100% IDA neutralisation after the Corona pandemic is settled down. We have to take the cue and move towards this direction.


5. Long process: Taking our own time we may start negotiations with the Government/ appropriate bodies either to exempt BSNL from the Affordability Clauses which put on hold to our Pay Revision or fit in the BSNL into a clause which permits Pay Revision irrespective of earning profit or loss. 


6.Please go through the clauses under Annexure Il of Affordability mentioned under para 4 of DPE guidelines issued to all PSUs after III PRC's recommendations on pay Revision were announced. 


7. Even in Sick CPSES referred either to BIFR or to AAIFR, Pay Revision is possible in accordance with the rehabilitation packages approved by the Government after providing for additional expenditures for pay Revision in these packages. BSNL has not come to that stage. So we have to convince the administration to make provisions for Pay Revision in the packages announced for rehabilitation or revival plan. 


8.The second clause is applicable to the PSUs which are registered under section 25 of companies act, 1956 and section 8 of companies act, 2013. The PSUs which by their very nature of business are not-for-profit companies, are eligible for implementation of revised compensation structure as being recommended for other CPSEs. We may have to try to bring BSNL into this category of PSEs since BSNL is created not just for profit but to extend communication service at any cost to every nook and corner of the rural India unlike other Private service providers.It is a well known fact that we have enough proofs to substantiate our stand. Here we would like to remind what our Hon'ble MOC spoke in the inauguration function of OFC project laying underground OFC between CHENNAI and Andaman. His committed statement that BSNL is not like other mobile or telephone company and the assurance he gave on it's Revival are a turning point and are really commendable. Overlooking the strong objections of Finance Ministry, he was able to get clearance for 73,000 crores of rupees from budget itself for Revival plan.


9.Hence instead of making attempts to convince our members to be patient for a minimum period of six years or more until the judgement of the court of all level comes, we may convince them to wait for at least a short period of six months so as to utilize the time to convince the administration by taking joint efforts by all Unions/ Associations of BSNL. We may plan to start support campaigns among public to save BSNL in this new environment after VRS and seek the interference of MPs through Parliament to change the affordability clauses which are against us and irrelevantly made applicable to BSNL and MTNL.


10. We have not paid sufficient attention to dilute these provisions in the past. From now on let us shift our focus towards this area. A committee may be constituted after getting approval from our Association to proceed with the plan, whatever may be, approved on the above lines so as to shape an unified demand on Pay and Pension revision even after knocking at the doors of the court.


Dear Comrades! With this I conclude and request our leadership to do the needful considering the above notes unbiasedly. You are also requested to spare sometime amidst your tight schedule so as to break the present impasse and find a breakthrough.


Thank you Comrades! 

Yours fraternally, 

NVeerapandian,

Advisor, AIBSNLPWA,

Thanjavur BA

16-10-2020.


Cell: 9486103262











Tuesday, October 6, 2020

விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்கள்

 கொரோனா தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி அவசரகதியில் கடந்த பாராளுமன்றத் தொடரில் விவசாயம், விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் சம்பந்தமாக மூன்று சட்டங்களும் ஜனநாயக மாண்புகளைப் புறக்கணித்து நிறைவேற்றப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்குப் பின் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள் என வழக்கம்போல இந்நாட்டுப் பிரதமர் நெஞ்சகல மார்தட்டிக் கொள்கிறார். ஆனால் இது புதிய சட்டமல்ல. அறுபது ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டு முறியடிக்கப் பட்ட சட்டப்பிரிவின் புதிய வடிவமே இது. 


நாளை விரிவாகப் பார்ப்போம்.

Saturday, September 5, 2020

 Dear Comrades, Com.Amithji is no more! 


Com.Amithji of Kolkata, Our leading light of AIBSNLEA who from its inception and in every stage of its growth put his impression in our hearts is no more! In every conference we met, his role was noteworthy and his guidance threw light over any crisis so that we could come out safely and carry forward our AIBSNLEA flag uninterruptedly. His concern over Tamilnadu and Chennai, when I was elected Circle Secretary of Tamilnadu as our organisation was betrayed again is to be ever remembered. When we met in subsequent Meeting either of CWC or AIC, he was very particular about the membership. While we showed the increase in membership, he appreciated us and at the same time he, on his over enthusiasm, verified with the quota received by the CHQ to determine the correct membership. 


His interest on organisational issues helped strengthen our organisation and on our demands, make our AIBSNLEA come around proudly. He was behind every success of our organization. He was  particularly behind Com. Prahladji for his untiring works and an inspiration to all the activists of AIBSNLEA who dedicatedly involved themselves for the growth of our Organisation.


Fortunately I had a chance to have interacted with him after the result on MVP came out. He was the only person openly coming out with constructive criticism without any delay just because of his deep sorrow and commitment towards our AIBSNLEA. His suggestions put forth reflected his involvement and the concern over the revival of AIBSNLEA despite its poor performance in MVP. 


My sharing of views over pension revision and pensioners' association still remain undeleted in the whatsapp group I had with him. Just three days back, I again shared my views with him. Though I contacted after about 6 months, he started responding immediately. The time was 1030 PM. Though I knew that his health condition was not good, in the interest of our organisation, I rang up. Unlike some leaders, he answered within no minutes. We conversed for about half an hour. I asked him when he went to bed. Laughingly but with tiredness in his voice, he told that he awakened just to read the views I sent to him. I felt very much and wept at seeing the reply he sent. He mentioned that he was very weak and could not function as before. When we finished our talks, the clock showed 1230 beyond midnight. I thought that his health condition may be somewhat improved. If I knew his deteriorating health well in advance, I would not have tortured him in the midnight.


This is Amithji! A rare soul our Organisation ever had. Let us share our grief and sorrow with his family and with our Comrades in whose memories, he will remain ever undiminished!


Let us bid farewell to the great leader!


N.Veerapandian,

Ex.Circle Secretary,

AIBSNLEA,

Tamilnadu Circle

05.09.2020.


Thursday, August 27, 2020

Corrected copy of What is next?

 What is next?

Dear Comrades! "What is next?" My close friend and who was once an activist in the forefront of our AIBSNLEA and who retired  some years ago like me, asked this question with grave concern. I like other comrades spread over India who are now still remaining in service and who are not idle in home having retired, seriously started thinking for about  a week after the announcement of the MVP results that shook us all. This much decline we never expected as the GS, Com. Sivakumar created confidence in our minds so that we could get more than 10,000 votes including the ready offer of 3,500 votes from another Association. But the slogan of JAI SRIRAM unusually echoed in our websites which was believed to fetch success as in the case of fascist fundamentalists, shocked me like other comrades as we are afraid as though  our non-political Association have become a coloured one. 

Now we came to know through our organisation that our strength was reduced to 3,700 due to VRS and other organisational reasons. Unlike in the past after first MVP, we may not have the facilities that would be extended to the first and second organisations. We are not sure whether the recovery of subscription from the salary of the members will be permitted to all other respective associations including ours or not. 

In this critical juncture, our leaders have to dispassionately think over for the reorganisation of our Association at all levels with the available serving Executives as many of our office bearers at all levels of our organisation hitherto function have either retired by this time or gone on VRS. So the Reorganisation may be our first priority.

Mutual accusations will bear no fruit but the persons knowing well for this crushing set back should themselves come forward accepting the moral responsibility at all levels and hand over the torch to the young and energetic elements so that the smooth running of our Association could never be allowed to become stranded.The moral courage exhibited by our leaders while daringly taking the responsibility for the defeat in front of the members really has shot up their image to the sky. It is magnanimous and commendable!

It is really a welcome move of SNEA for unification of organisations. It was expressed in their CHQ website. I may be wrong in understanding the depth of the language they used. About ten years ago, in Chennai CWC of our Association, Com. Jogi, then GS of SNEA who was fondly invited to address by Com.Prahlad Rai, the then GS, even in our subjective committee meeting after Open Session, assured for the merger of our two Associations. The thundering response of the house shown to his speech echoed the expectations of all members including the SNEA leaders who accompanied him to the meeting. We need not go to the past to reanalyze the reasons for the failure of the said move, which is of no use. The strength of unity is well understood but Unity even at this critical days while the very existence of our Mother BSNL is in jeopardy, through coming closer is still a mirage and a long day dream. 


The current situation prevailing in all the planes in our country need not be explained. The autocratic Central Government seems unhelpful for the revival of BSNL though our Hon'ble  MOC, Sri.Ravi shankar prasad declared in Parliament to our favour on Revival of BSNL. So for each and every issue, our strong one-piece  unity only will be a helping hand. Though whatever votes our Associations individually got, it will not make a breakthrough in solving the problems both of ourselves and of BSNL. 

Our solid unity to be built among all Non-executive unions and Executive Associstions invariably only will give confidence among the remaining work force a part of which was maimed under VRS. In the midst, the letter openly written by our veteran leader and guiding light Com.Amith gupta from West Bengal to GS, AIBSNLEA, bothering least about his poor health conditions, have been going viral among our comrades, as it remains unanswered.

No time to breath in. Reorganisation through infusion of hot and young blood into the leadership and making the old guards as the guiding light to make the organisation walk in the right path are the higher priorities!

Let us move forward with all assertiveness. While we are small, we must be like the bullets! In turn, if we are big, we must be the guns! Without these two, no war could be won!

Thank you Comrades!

N.Veerapandian,

Ex.C.S./AIBSNLEA,

Tamilnadu Circle.

27.08.2020.