மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து இராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு வேலைத் துவங்கி விட்டது. ஒரே மாதிரி ஃபார்முலா. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைப் பிடிக்க முயற்சி செய்வது. அதிருப்தியாளர்களை அடையாளம் காண்பது. பேரத்தை இறுதி செய்வது. கொரோனா போன்ற எந்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை இருந்தாலும் ஆயிரக்கணக்கான கோடி இருப்பில் உள்ள பணத்தை கொண்டு எதையும் சாதித்து விடமுடியும் என்னும் ஆணவத்தின் உச்ச கட்டம் இதுதான். பாஜகவின் பாசிச முகம் அதன் ஒவ்வொரு காரியத்திலும் தெரியத் துவங்கி இருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகளில் அதற்கு நம்பிக்கை அறவே கிடையாது. ஒரே இந்தியா, ஒரே....ஒரே என்பதெல்லாம் அதிகாரக் குவிப்பிற்கான பாசிச வழி முறைகள். மார்ச் மாதத்திலிருந்து மக்கள் படும் அவலங்களைத் தீர்க்க துப்பில்லாத அரசு இத்தகைய இழிந்த காரியங்களைச் செய்ய மட்டும் அஞ்சுவதே இல்லை. எதுவரை போகிறது பார்க்கலாம்.
No comments:
Post a Comment