புராணங்களில் உள்ள இன்றைய வாழ்வுக்கு ஒவ்வாதவைகளை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அவைகளை எல்லாம் சொல்லாமலே கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்ப முடியும். கல்வி அறிவு இல்லாத காலத்தில் படித்து சொல்ல வேண்டிய கட்டாயம் தந்தை பெரியாருக்கு இருந்தது. இப்போது நமது பிள்ளைகள் போதுமான அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் தெரிந்து கொள்வார்கள். வர்ணாசிரமம் இந்தக் காலத்தில் எப்படி மீண்டும் பழைய ஆண்டான் அடிமைச் சமூகத்திற்கு இட்டுச்செல்லும் முயற்சியே என்பதை மட்டும் நாம் சொல்லி அது எப்படி தகர்க்கப் பட்டது என்பதை தந்தை பெரியார், அம்பேத்கர், அயோத்தி தாசர், ஜோதிபா பூலே, ராஜா ராம் மோகன் ராய் ஆகியோரது நூல்களை படித்தால் அவர்களே இயக்கமாய் கிளர்ந்தெழுவார்கள். நாம் அந்த வழியை மட்டும் காட்டுவோம். விடாது கடவுள் மறுப்பை ஆதாரங்களோடு நிறுவுவோம்.
இப்படிச் செய்தாலே பலர் பிழைப்பின்றி போய் விடுவர். சனாதன வாதிகளின் கைக் கூலிகள் நம்மைச் சார்ந்தவர்கள் தானே. நம் கையை எடுத்து நம் கண்களைக் குத்தும் வேலையைத்தானே சனாதனிகள் செய்து வருகிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக நம்மில் சிலர் விலை போகிறார்கள். பிழைப்பிற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அவர்கள் செய்யும் காரியம் அவர்கள் உணரும் காலம் வராமல் போகாது. தந்தை பெரியாரை தாக்கியவர்கள், கல்லெடுத்து வீசியவர்கள், மலத்தை வீசியவர்கள், இன்றும் சாயம் அடிப்பவர்கள் யார்? நமது பணியை விடாது செய்வோம். ஒழுக்கக் கேடான பழிகளை நம் தலைவர்கள் மீது வீசுவது நல்ல பண்பென்றால் அதைத் தொடரட்டும்.
நம் பணி தொடர்வோம். சமூக நீதிக்கான போராட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது.

No comments:
Post a Comment